Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யிடமே பிகில் நஷ்டம் என கார்ப்பரேட் புத்தியை காட்டிய AGS நிறுவனம்.. கடுப்பான தளபதி

bigil-vijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யிடமே பிகில் நஷ்டம் என கார்ப்பரேட் புத்தியை காட்டிய AGS நிறுவனம்.. கடுப்பான தளபதி

விஜய்(vijay) நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பிகில். கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததை வருமான வரித் துறையை சேர்ந்த அதிகாரிகளே அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டனர்.

ஏஜிஎஸ்(AGS) நிறுவனம் கிட்டத்தட்ட 180 கோடி பட்ஜெட்டில் பிகில் படத்தை தயாரித்ததாக அப்போதே அறிவித்தனர். ஆனால் தன்னுடைய கார்ப்பரேட் நிறுவன புத்தியை விஜய்யிடமே காட்டியதாக தற்போது அப்செட்டில் இருக்கிறாராம் தளபதி. பிகில் படம் மிகப்பெரிய வெற்றி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் பிகில் எங்களுக்கு 20 கோடி நஷ்டம் என கணக்கு காட்டியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். அதுமட்டுமில்லாமல் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு விஜய் மீண்டும் படம் பண்ணுவதால் ஏஜிஎஸ் நிறுவனமும் இன்னொரு படம் தயாரித்து கல்லா கட்ட முடிவெடுத்து விட்டார்களாம்.

இதனால் வேண்டுமென்றே பிகில் நஷ்டம் என்றும், விஜய் கால்ஷீட் மீண்டும் எங்களுக்கு வேண்டும் என்றும் கேட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இது உண்மையா, இல்லையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் போது தான் தெரியும்.

ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யிடம் கால்சீட் கேட்டதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. வெற்றியை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்தால் போட்ட பணத்தை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா செலவாகி விட்டதாம். விஜய் தற்போது அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து பட்ஜெட்டை சுருக்கி உள்ளார்.

இந்த ஐடியாவை கொண்டே ஏஜிஎஸ் நிறுவனமும் ஒரு இளம் இயக்குனரை வைத்து குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து பெரிய கல்லா கட்ட ஆசைப்படுகிறார்களாம். அதற்காக இப்படி ஒரு சில்லரைத்தனமான காரியத்தை செய்வதா என விஜய் கடுப்பில் இருப்பதாகவும்,ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இனி கால்ஷீட் கிடையாது எனவும் தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துவிட்டாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top