Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜி.வியைத் தொடர்ந்து ஜெய்யும் விலகினார்!

பொங்கலுக்கு ‘நாங்க வர்றோம், நாங்க வர்றோம்’னு முந்திக்கொண்டு வந்தவர்கள் எல்லாம் தற்போது ஒவ்வொருவர்களாக பொங்கல் ரேஸில் இருந்து விலகிக்கொண்டிருக்கிறார்கள். முதலில் ‘புரூஸ் லீ’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று அறிவித்தார்கள்.

தற்போது ஜெய் நடித்திருக்கும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ரிலீஸ் தேதியையும் மாற்றியுள்ளனர். இந்த இரு படங்களும் பிப்ரவரி மாதம் ரிலீஸாகின்றன.‘யாக்கை’, ‘குற்றம் 23’ படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவித்ததோடு சரி, வேற எந்த அப்பேட்டும் அவர்கள் சைடில் இருந்து வரவில்லை.

ஆக, ஜனவரி 12-ம் தேதி விஜய்யின் ‘பைரவா’வும், 13-ம் தேதி விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம் மற்றும் 14-ம் தேதி பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என மூன்று படங்கள் மட்டுமே பொங்கலை சிறப்பிக்கவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top