fbpx
Connect with us

Cinemapettai

முதல் படத்திற்கு பிறகு இந்த இயக்குனர்கள் என்ன ஆனார்கள்- ஒரு சர்வே ரிப்போர்ட்

News | செய்திகள்

முதல் படத்திற்கு பிறகு இந்த இயக்குனர்கள் என்ன ஆனார்கள்- ஒரு சர்வே ரிப்போர்ட்

கோலிவுட்டை பொறுத்தவரை யார் ஹிட் கொடுக்கிறார்களோ, அவர்களை தான் தலையில் தூக்கி கொண்டாடும். அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் ஹிட் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமும் அடைவார்கள். ஆனால், முதல் படத்திற்கு பிறகு இவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாது, அப்படிப்பட்ட இயக்குனர்கள் குறித்து பார்ப்போம்.

சாந்தகுமார்

அருள்நிதி நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளிவந்த மௌனகுரு விமர்சனங்களால் கொண்டாடப்பட்டது. ஏனெனில் மிகவும் யதார்த்தமாக நகரும் கதையில் கதாபாத்திரங்கள் மிக வலுவாக இருந்தது, இப்படம் ஹிந்தியில் முருகதாஸே ரீமேக் செய்யும் அளவிற்கு பேசப்பட்டது, ஆனால், இந்த இயக்குனர் என்ன ஆனார் என்று தற்போது வரை தெரியவில்லை.

நவீன்

பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்து மூடர்கூடம் தரமான படத்தை கொடுத்தவர் நவீன், டார்க் ஹியூமர் என்ற தளத்தில் மிகவும் ரசிக்கும்படியாகவும், யோசிக்கும்படியாகவும் படத்தை கொடுத்த நவீன் அடுத்தபடத்தை எப்போது தொடங்குவார் என்று யாருக்குமே தெரியவில்லை.

தியாகராஜன் குமாரராஜா

இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு திரைக்கதை, இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடி, எங்காவது ஒரு நல்ல ப்ரிண்ட் இந்த படத்திற்கு கிடைக்காதா என மக்கள் அழைந்து வருகின்றனர், இப்படம் 2011-ம் ஆண்டு வெளிவந்தது, இவர் 6 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் அநீதி கதைகள் என்ற படத்தை தொடங்கியுள்ளார்.

ஜான் மகேந்திரன்

இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இவர் இயக்கத்தில் விஜய் நடித்த படம் சச்சின், இப்படம் விமர்சனங்களால் ஒன்றும் கொண்டாடப்படவில்லை என்றாலும், இன்று வரை பல விஜய் ரசிகர்களுக்கு பேவரட் இந்த படம், இவர் அதன் பிறகு ராஞ்சனா தமிழ் பதிப்பிற்கு வசனம் எழுதினார், இரண்டு படங்கள் பூஜை போட்டு அப்படியே நின்றுவிட்டது.

ராஜேஷ் எம் செல்வா

முதல் படமே தன் குருநாதர் கமல்ஹாசனை வைத்து தூங்காவனம் என்ற படத்தை இயக்கினார், இப்படம் வெளிவந்து 2 வருடம் ஆகிவிட்டது, இன்னும் இவரும் அடுத்தப்படத்தை தொடங்கவே இல்லை.

விஜயகுமார்

உறியடி என்ற சென்சேஷ்னல் படத்தை கடந்த வருடம் கொடுத்தவர் விஜயகுமார். இப்படம் வெளிவந்து ஒரு வருடமாகிவிட்டது, இன்னும் இவரின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு வரவே இல்லை.

அஷ்வின் சரவணன்

நயன்தாரா முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடித்து ஹிட் அடித்த படம் மாயா, இப்படத்தின் மேக்கிங்கை பார்த்து ஹாலிவுட் இயக்குனரே பாராட்டினார், ஆனால், இப்படத்தின் இயக்குனர் இன்று வரை அடுத்து என்ன படம் இயக்கவிருக்கின்றார் என்று தெரியவில்லை.

கே.எஸ்.மணிகண்டன்

ரூ 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கண்ணா லட்டு திங்க ஆசையா படம் சுமார் ரூ 12 கோடி வரை வசூல் செய்தது, இப்படி ஒரு ஹிட் படத்தை கொடுத்த கே.எஸ்.மணிகண்டன் எங்கே போனார் என்றே தெரியவில்லை, இப்படம் வெளிவந்து 4 வருடமாகிவிட்டது.

ரமேஷ்

தெகிடி என்ற சூப்பர் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்தவர் ரமேஷ், இவர் அடுத்து என்ன படம் இயக்கவிருக்கின்றார் என்று தெரியவில்லை, புதிய காவியம் என்ற படத்தை இவர் எடுக்கப்போகின்றார் என்று மட்டும் ஒரு சில தகவல் நெட்டில் உள்ளது.

நிர்மல் குமார்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட் படம் சலீம், இவர் அடுத்து மலையாள படம் ஒன்றை எடுத்தார், ஆனால், தமிழில் அடுத்தப்படம் பற்றி எந்த தகவலும் இல்லை.

கார்த்திக்

கப்பல் விமர்சனங்கள் பெரிதும் இல்லை என்றாலும், யங்ஸ்டர் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றது, இப்படத்தின் இயக்குனரும் தற்போது வரை தொடர்பு எல்லைக்கு அப்பால் தான் இருக்கின்றார்.

இதில் ஒரு சில இயக்குனர்கள் தங்கள் அடுத்த படங்களை பற்றி ஒரு சில தகவல்கள் தந்தாலும், ஒரு படம் முடிந்து அது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றும், இப்படி அடுத்தப்படத்திற்கு இத்தனை நாட்கள் ஆவது எந்த விதத்திலும் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம் இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top