புலி படத்தில் விழுந்த அடி.. தட்டுத் தடுமாறி எழுந்து வரும் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகி பலத்த நஷ்டத்தை சந்தித்த திரைப்படம் புலி.

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல் வந்து ஏறாத்தா என்ற கதையாக விஜய்யை குழந்தைகளுக்கு பிடிக்கும் என குழந்தைத்தனமாக படமெடுத்து அவரது தலையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டனர்.

விஜய்யின் சினிமா கேரியரில் சுறா படத்திற்கு பிறகு பலத்த அடி வாங்கியது புலி படம்தான். இந்த படத்தை தயாரித்தது சிபு தமின்ஸ் என்ற நிறுவனம்.

puli-cinemapettai
puli-cinemapettai

அடுத்ததாக விக்ரம் நடிப்பில் இரு முகன் என்ற படத்தை தயாரித்தும் பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லையாம். இதனால் தற்போது ரீமேக் படம் ஒன்றை தயாரிக்க உள்ளார்களாம்.

தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படம் மாநகரம். மாநகரம் படத்தின் இந்திப் பதிப்பை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. புலி படத்தை தொடர்ந்து பல படங்களில் நஷ்டம் அடைந்த மாநகரம் படத்தின் இந்திப் பதிப்பு ஒரு நல்ல வசூலை பெற்றுத் தரும் என நம்புகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.