Tamil Cinema News | சினிமா செய்திகள்
செக்க சிவந்த வானம் ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்த முன்னனி ஹீரோ படத்தில் இணைந்த அருண் விஜய் !
அருண் விஜய்
சினிமாவிற்கு தேவையான அணைத்து வித்தைகளையும் முறையாக கற்றவர். இவர் நடிப்பில் துள்ளி திரிந்த காலம், பாண்டவர் பூமி, இயற்கை, ஜனனம், தடையற தாக்க, குற்றம் 23 போன்றவை சூப்பர் ஹிட்.
என்னை அறிந்தால் படம் வாயிலாக இவர் சினிமா வாழ்க்கை பிரேக் த்ரூ அடைந்தது. அதன் பிறகு குற்றம் 23 சூப்பர் ஹிட் ஆனது. தடம், செக்க சிவந்த வானம் மற்றும் சாஹோ தான் இவரின் அடுத்ததடுத்த ரிலீஸ்.
சில நாட்களுக்கு முன்பு தான் துபாயில் மணிரத்தினம் அவர்களின் ஷூட்டிங்கை முடித்தார். முடித்தவுடன் அபுதாபியில் நடக்கும் பிரபாஸின் சாஹோ படத்தில் இணைத்துள்ளார். இதனை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘சாஹோ’.
தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் என ஒரே நேரத்தில் 4 மொழிகளில் தயாராகும் படம். ஷ்ரத்தா கபூர் ஹீரோயின். இதனை சுஜீத் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்ஷன் ரொமாண்டிக் த்ரில்லர் ஜானர். இப்படத்தில் நீல் நிதின், அருண் விஜய், ஜாக்கி செராஃப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்சரேகர், மந்திரா பேடி, ஈவ்லின் ஷர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம்.
ஷங்கர்-எஹ்சான்-லாய் இசை. மதி ஒளிப்பதிவு . ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மற்றும் சில கார் சேசிங் காட்சிகள் அபுதாபியில் படமாக்கி வருகின்றனர். இதில் தான் அருண் விஜயும் இணைந்துள்ளார்.
