fbpx
Connect with us

Cinemapettai

படத் தயாரிப்புக்கு முழுக்கு போட்ட ஏஜிஎஸ் நிறுவனம்.. ஆள விடுங்க சாமி என ஓட்டம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படத் தயாரிப்புக்கு முழுக்கு போட்ட ஏஜிஎஸ் நிறுவனம்.. ஆள விடுங்க சாமி என ஓட்டம்!

தமிழ் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர்கள் ஏஜிஎஸ் நிறுவனம். கல்பாத்தி எஸ் அகோரம் பல படங்களை தயாரித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஏஜிஎஸ் தயாரிக்கும் படங்கள் தரமானதாக இருக்கும் என மக்கள் மத்தியில் ஒரு கவனிப்பு இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ஏஜிஎஸ் நிறுவனம் தற்காலிகமாக படம் தயாரிப்பில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக தெரிகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த படம் பிகில். முதலில் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக்க நினைத்த இந்த படத்தில் செலவு மேலும் 30 கோடி எகிறி 180 கோடியாக மாறிவிட்டதாம். இதற்கு காரணம் அட்லீயின் பொறுப்பின்மை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இதனால்தான் அட்லீக்கு தற்போது படவாய்ப்புகள் இல்லையாம். இது ஒருபுறமிருக்க தல61 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அது எல்லாம் பொய் தகவல் என அறிக்கை வெளியிட்டுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

பிகில் படத்தின் போது ஏற்பட்ட பல்வேறு விதமான கசப்பான சம்பவங்களுக்கு பிறகு பட தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்களாம். பிகில் படம் 300 கோடி வசூல் சர்ச்சை, இன்கம்டேக்ஸ் சர்ச்சை என ஏஜிஎஸ் நிறுவனத்தை ஒரு வழி செய்து விட்டதாம் பிகில் படம்.

பிகில் படம் 300 கோடி வசூல் செய்தாலும் ஏஜிஎஸ் நிறுவனம் சில நஷ்டங்களை சந்தித்ததாக தெரிகிறது. விநியோகஸ்தர்கள் பலர் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பேசிய பணத்தை தராமல் ஏமாற்றியதாக விட்டார்களாம்.

படம் பெரிய அளவில் வசூல் செய்தும் தமக்கு அதிக அளவில் லாபம் வரவில்லையே என சோகத்தில் உள்ளதாம் ஏஜிஎஸ் நிறுவனம். ஏற்கனவே ஒரு முன்னணி நடிகரின் படத்தை தயாரித்து பஞ்சாயத்தான நிலையில் மீண்டும் ஒரு முன்னணி நடிகர் படமா என ஆதங்கத்தில் இருக்கிறார்களாம்.

இனி பெரும்பாலும் ஏஜிஎஸ் நிறுவனம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சிறிய படங்களை தயாரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட்.

Continue Reading
To Top