fbpx
Connect with us

Cinemapettai

BB-க்கு முன்.! BB-க்கு பின்.! அனல்பறக்கும் ரம்யாகிருஷ்ணன்.!

News | செய்திகள்

BB-க்கு முன்.! BB-க்கு பின்.! அனல்பறக்கும் ரம்யாகிருஷ்ணன்.!

திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக சினிமா, சீரியல் என்று நடித்து வந்த ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட்டை பாகுபலிக்கு முன், பாகுபலிக்கு பின் என பிரிக்கலாம் போல இருக்கிறது. தற்போது,ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் சூடுபறக்கிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Ramyakrishnan

Ramyakrishnan

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

தற்போது கமலின் சபாஷ் நாயுடு மற்றும் பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் பால கிருஷ்ணுடு உள்பட சில படங்களில் நடித்து வருபவர், சைலஜா ரெட்டி அல்லுடு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Ramya_Krishnan

சமீபத்தில் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். மாருதி இயக்கும் இந்த படம் காமெடி கலந்த கதையில் உருவாகிறது.

இந்த படத்தில் சைலஜா ரெட்டி என்ற லீடு ரோலில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாராம். அதனால் அவரைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருக்கிறதாம். அதோடு, சித்தாராவும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top