Connect with us
Cinemapettai

Cinemapettai

prashanth-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20 வருடம் கழித்து மீண்டும் அதே இயக்குனருடன் கைகோர்க்கும் பிரசாந்த்.. அதுக்கு மும்தாஜ் வேணுமே

ஒரு காலத்தில் சாக்லேட்பாய் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த பிரசாந்த் இடையில் சொந்தப் பிரச்சினைகள் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறினார். தற்போது மீண்டும் விட்டதை பிடிக்க களமிறங்கியுள்ளார்.

அந்த வகையில் அடுத்ததாக பிரசாந்த் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தை தொடங்கிவிட்டார். சமீபத்தில் சென்னையில் அந்த படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்துடன் சிம்ரன் நடித்து வருகிறார். மேலும் அந்தகன் படத்தை முதலில் மோகன்ராஜா அல்லது பொன்மகள்வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க இருந்தனர்.

ஆனால் இருவரும் அந்த படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகியதால் தற்போது இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் பிரசாந்த் தந்தை தியாகராஜன். இவர்தான் அந்தகன் படத்தை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தகன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக 2001ஆம் ஆண்டு தனக்கு சாக்லேட் என்ற படத்தை கொடுத்த இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் பிரசாந்த். இதற்கான கதை அமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

a-venkatesh-cinemapettai

a-venkatesh-cinemapettai

ஆனால் ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளியான சாக்லேட் திரைப்படம் சரியாக போகவில்லை. மும்தாஜின் ‘மல மல’ பாடலுக்காக கொஞ்சம் ஓடியது. தற்போதுதான் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் பிரசாந்த் எதற்கு தேவையில்லாமல் தன்னுடைய பழைய இயக்குனருடன் கூட்டு சேர்க்கிறார் என்ற கவலையில் உள்ளதாம் கோலிவுட்.

Continue Reading
To Top