Tamil Cinema News | சினிமா செய்திகள்
யார் வசூல் மன்னன் பாத்துருவோமா? 9 வருடத்திற்கு பின் ஒத்தைக்கு ஒத்தையாக களமிறங்கும் விஜய், சூர்யா
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சூர்யா மற்றும் விஜய் ஆகிய இருவரின் படங்களும் ஒரே தேதியில் வெளியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு படங்களையும் திறமையான இயக்குனர்கள் இயக்குவதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
கடைசியாக விஜய் மற்றும் சூர்யா, 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு நேருக்கு நேர் ஏழாம் அறிவு மற்றும் வேலாயுதம் படங்களின் மூலம் மோதிக் கொண்டனர். இதில் ஏழாம் அறிவு திரைப்படம், வேலாயுதம் திரைப்படத்தை விட சற்று அதிகமாக வசூல் செய்தது.
தற்போது மீண்டும் விஜய் நடிக்கும் மாஸ்டர் படமும், சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது. சூரரைப்போற்று திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் தொழில்நுட்பம் காரணமாக சம்மருக்கு வெளியிட உள்ளனர்.
அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படம் அறிவிப்பின் போதே சம்மர் ரிலீஸ் என்ற உறுதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இருவருமே வசூல் மன்னர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், இருவரில் யார் அதிக வசூல் மன்னன் என்பதை ஒத்தைக்கு ஒத்த நேரடியாக போட்டு பார்க்க முடிவு செய்து விட்டார்கள் போல.
இதேபோல்தான் பொங்கலுக்கு பேட்ட மற்றும் விஸ்வாசம் 2 படங்களும் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தீபாவளிக்கு வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
