fbpx
Connect with us

Cinemapettai

விக்ரம் பட்ட அவமானம்,ஹீரோ ஆசை அவ்வளவு தான் என பேசியவர்களுக்கு பதிலடி.!

vikram

News | செய்திகள்

விக்ரம் பட்ட அவமானம்,ஹீரோ ஆசை அவ்வளவு தான் என பேசியவர்களுக்கு பதிலடி.!

விக்ரம் தமிழ்த் திரைப்பங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர்.

vikram

விக்ரம் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.

இவற்றுள் பல திரைப்பட ரசிகர் மத்தியில் பிரபலம் இல்லை. இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த சேது என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

VIKRAM

vikram

இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் தில், ஜெமினி, தூள், சாமி போன்ற வெற்றிமிக்க படங்களில் நடித்து மானா வாரியான ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார்.

இவர் காசி எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றவர். பின்னர் பிதாமகன் படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார்.

sethu

விக்ரம் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். ஆனால், சேது என்ற படம் வரவில்லை என்றால் இன்று விக்ரம் என்ற நடிகரே இல்லை.

அந்த வகையில் சேது டைமில் விக்ரம் காலில் பயங்க அடிப்பட்டு சிகிச்சை நடந்திருந்தது.

பலரும் இனி உன் ஹீரோ ஆசை அவ்வளவு தான், நொண்டி கதாபாத்திரம் வேண்டுமானால் நடிக்கலாம் என்று கூறினார்களாம்.

உடனே விக்ரம் பாலாவிடம் சென்று நம்மை கிண்டல் செய்தவர்கள் முன்பு ஜெயித்தே ஆகவேண்டும் என்று சொல்லி போராடி வெற்றி பெற்றாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top