விஜய்யின் அடுத்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.

Vijay
Vijay

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் எழுத்து மற்றும் இயக்கத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைப்பில் ஈ ராமதாஸ், முத்துராமன், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ள படம் அறம்.

அறம் படம் மக்களின் முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே அறம்.தற்பொழுது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும்

Nayanthar as Collector Mathivathani in Aram movie.

மெர்சல் வெற்றிக்குப் பிறகு விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

அதிகம் படித்தவை:  மெர்சல் வந்தால் என்ன? வேலைக்காரன் ரிலீஸ் உறுதி.. சிவகார்த்திகேயன் முடிவில் மிரண்ட கோடம்பாக்கம்!

அந்தப் படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் நயன்தாரா தரப்பில் இருந்தும் இதற்கான பதில் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை. தற்சமயம் மெர்சல் வெற்றியை துபாயில் படக்குழுவினருடன் கொண்டாடி வருகிறார் விஜய்.

Vijay
Vijay

நடிகை நயன்தாரா கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் படுதோல்வியடைந்தது. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜயுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் படித்தவை:  விஜய் 60 படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த படக்குழுவினர்

ஆனால், ஒரு நடிகையுடன் இணைந்து நடித்து அந்த படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை என்றால் நடிகர் விஜய் அந்த நடிகையுடன் மீண்டும் நடிக்க மாட்டார் என்பது நீண்ட காலமாக வெளிப்படையாக தெரியும் விஷயம்.

vijay-nayanthara

இந்நிலையில், வில்லு என்ற தோல்வி படத்தின் நாயகி நயன்தாராவுடன் விஜய் மீண்டும் இணைவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவர் இந்தியா திரும்பிய பிறகு இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என தெரிய வருகிறது.