Tamil Cinema News | சினிமா செய்திகள்
8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.! என்ன திரைப்படம் தெரியுமா.?
நடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து ஹிட்டான படங்களின் வரிசையில் சின்ன வீடு என்ற திரைப்படமும் ஒன்று அந்தப் படத்தில் நடிகர் பாக்கியராஜ் விருப்பமில்லாத குண்டான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , திருமண வாழ்க்கை கசப்பால் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி தான் சின்ன வீடு படத்தின் கதையை இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் 1985இல் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது அதுமட்டுமில்லாமல் வசூலிலும் கல்லா கட்டியது இந்த திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக பாக்கியராஜ் நடித்திருந்தார், கதாநாயகியாக ஊர்வசியின் அக்கா கல்பனா நடித்திருப்பார் அவருடன் இன்னொரு நாயகியான அனு நடித்திருந்தார்.
பாக்கியராஜ் நீண்டகாலமாக எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருந்தார் இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு சித்து ப்ளஸ் டூ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் அதன்பிறகு எந்த படத்தையும் இயக்காமல் தற்பொழுது சின்ன வீடு 2 என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க இருக்கிறார் மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
