இயக்குனர் சாந்தகுமார் மௌனகுரு என்ற தரமான படத்தை இயக்கி விட்டு ஏழு வருடங்களாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார் தற்போது அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளார், கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனகுரு இந்த திரைப்படம் விமர்சனங்களால் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலும் ஆகியது.

இந்தப் படத்தின் ஹிந்தி ரைட்ஸ்சை ஏ ஆர் முருகதாஸ் முறையாகப் பெற்று அகிரா என்ற பெயரில் இயக்கியிருந்தார் அதேபோல் கன்னடத்தில் குரு எனவும் தெலுங்கில் சங்கரா எனவும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி கண்டது ஆனால் சாந்தகுமாருக்கு அடுத்த படம் கிடைப்பதற்கு ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன.

அதிகம் படித்தவை:  சுந்தர்.சியின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த ஆர்யா

இவரை இவ்வளவு வருடம் காக்க வைத்ததற்கு அண்ணன் தம்பிகளான சூர்யாவுக்கும் கார்த்திக்கும் பங்கு இருக்கிறது , அதன்பிறகு தற்பொழுது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மகாமுனி என பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த திரைப்படமும் மௌனகுரு போல க்ரைம், திரில்லர் கதையம்சம் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் டைட்டில் அப்படி தான் வைத்துள்ளார்கள், இந்த படத்தில் ஆர்யா நடிகை மகிமா நம்பியார், இந்துஜா, ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ் அருள்தாஸ், காளிவெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள் இந்த திரைப்படத்தை தான் இயக்குனர் சாந்தகுமார் கதை எழுதி இயக்குகிறார். ஏழு வருடங்களுக்கு பிறகு இயக்கம் இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.