Videos | வீடியோக்கள்
21 வருடம் கழித்து, ரெண்டே நிமிடத்தில் மனதை உருக்கிய சித்ராவின் குரல்.. வாரிசுவின் வைரலாகும் அம்மா பாடல்
வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்போது படத்தின் ப்ரோமோஷன்காக போஸ்டர் மற்றும் பாடல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் வாரிசு முதல் பாடல் ரஞ்சிதமே வேற லெவலில் ட்ரெண்டானது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது பாடலும் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு படத்தை பார்த்த விஜய் இந்த படத்தில் இடம்பெற்ற அம்மா பாடல் மனதை உருக்கியதாக கூறியிருந்தார். அதேபோல் வாரிசு படத்தின் மூன்றாவது பாடலாக சித்ரா குரலில் அம்மா பாடல் வெளியாகி உள்ளது.
Also Read : விஜய்க்கு வாரிசு படத்தில் பிடித்த 3 விஷயம்.. பார்த்து பார்த்து செதுக்கிய வம்சி
சித்ராவின் இன்னிசையான குரலுக்கு ஏற்ற வரிகளால் ஆராரோ என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களை வருடி இழுக்கிறது. தமன் இசை மற்றும் விவேக் வரிகள் பாடலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. எத்தனை தடவை கேட்டாலும் புதுவிதமான உணர்ச்சி தரும் இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை தாண்டி உள்ளது.
கிட்டதட்ட 21 வருடங்கள் கழித்து விஜய்யின் படத்தில் சித்ரா பாடியுள்ளார். ஏற்கனவே வலிமை படத்தில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான அம்மா சென்டிமென்ட் பாடல் வேற லெவலில் ட்ரெண்ட் ஆனது. அதையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு வாரிசு படத்தின் அம்மா பாடல் அமைந்துள்ளது.
Also Read : வாரிசு! துணிவு! முதலில் எந்த படம் போவீங்க? ரசிகர்களிடம் சிக்காத மாதிரி ஒரு பதில் சொன்ன H.வினோத்
இப்போதே வாரிசு படத்தின் ப்ரோமோஷன் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் இப்போது வெளியாகி உள்ள இந்த பாடல் தான் விஜய் ரசிகர்களுக்கு சில வருடம் காலர் டியூனாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் எப்போதும் கேட்க தூண்டும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
Also Read : வாரிசு படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா.. அனல் பறக்கும் அப்டேட்டை கொடுத்த ராஜு பாய்
