Tamil Cinema News | சினிமா செய்திகள்
17 வருடம் கழித்து பிரபல முன்னணி நடிகரை இயக்கும் பாலா.. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய படம்!
சமீபகாலமாக பாலா பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார் என்ற செய்தி எல்லாம் உண்மை இல்லையாம். தற்போது முன்னணி நடிகர் ஒருவரை வைத்து மூன்று ஹீரோ சப்ஜெக்ட் படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா எடுத்த வர்மா படம் OTT தளத்தில் வெளியானது. ஆனால் அந்த படம் படு மோசமான விமர்சனங்களை பெற்றதால் பாலாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் திரும்பும் திசையெல்லாம் பாலாவுக்கு இனி சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற அளவுக்கு பேச்சுக்கள் எழுந்துவிட்டது.
இந்த பேச்சையெல்லாம் உடைத்தெறியும் வகையில் தற்போது 17 வருடம் கழித்து முன்னணி நடிகரான சூர்யாவுடன் ஒரு படத்தில் கைகோர்க்க உள்ளாராம் பாலா.
சூர்யாவை வைத்து ஏற்கனவே பிதாமகன் மற்றும் நந்தா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பாலாவின் புதிய படத்திற்கு தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் சூர்யா மட்டுமில்லாமல் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோரும் சேர்ந்து நடிக்க உள்ளனர். மூன்று ஹீரோ சப்ஜெக்டில் உருவாகும் இந்தப் படம் பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறதாம்.

bala-suriya-cinemapettai
சூர்யாவின் மார்க்கெட் சூரரை போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சூடுபிடிக்கும் நிலையில் பாலாவுடன் படம் செய்ய வேண்டாம் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் பதிவிடுவதை பார்க்க முடிகிறது.
கண்டிப்பாக பாலா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தான் யார்? எப்பேர்பட்ட இயக்குனர்? என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது மறுக்க முடியாத ஒன்று.
