Connect with us
Cinemapettai

Cinemapettai

shankar-story

Tamil Cinema News | சினிமா செய்திகள்

17 வருடத்திற்கு பிறகு மீண்டும் நான்கு ஹீரோக்கள் படமெடுக்கும் சங்கர்.. முதல் ஹீரோ இவர்தான்!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இந்தியன்-2 படப்பிடிப்பில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறார்.

இனி கமலஹாசனை நம்பினால் வேலைக்காகாது என அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாராம் சங்கர்.

17 வருடத்திற்கு முன்னால் கிட்டத்தட்ட நான்கு ஹீரோக்களை வைத்து பாய்ஸ் என்ற படத்தை இயக்கிய ஷங்கர் மீண்டும் அதே மாதிரி கதையில் பிரம்மாண்ட படம் ஒன்றை எடுக்க உள்ளாராம்.

அதற்கான கதையை அவர் உருவாக்கி விட்டதாகவும் தற்போது ஹீரோக்களை தேடும் பணியில் அவர் இருப்பதாகவும் தெரிகிறது.

ஷங்கரின் முதல் சாய்ஸாக இருப்பவர் கன்னட சினிமாவில் கேஜிஎப் என்ற பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்த யாஷ் தான்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

kfg_yash

kfg_yash

Continue Reading
To Top