Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

16 வருடங்களுக்கு பிறகு ராசியான நடிகையுடன் கூட்டு சேரும் சூர்யா.. பெண் இயக்குனரின் புதிய முயற்சி!

தமிழ் சினிமாவில் தல அஜீத்-ஷாலினிக்கு பிறகு அதிகம் விரும்பப்பட்ட பிரபல ஜோடி என்றால் அது சூர்யா-ஜோதிகா தான். அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படம் தான் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம்.

அதன் பிறகு தற்போது வரை எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவே இல்லை. இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவை இணைப்பதற்கான முயற்சியில் இருக்கிறாராம் ஒரு பெண் இயக்குனர்.

சமீபத்தில் வெளிவந்த சில்லு கருப்பட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற பெண் இயக்குனர் ஹலிதா. நான்கு வித்தியாசமான காதல் கதையை யதார்த்தமாக கூறி பல முன்னணி இயக்குனர்களின் கவனத்தைப் பெற்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ஹலிதாவிடம், சூர்யா ஜோதிகாவை வைத்து படம் இயக்க ஏதேனும் கதையை உங்களிடம் உள்ளதா என கேட்டுள்ளார்.

அதற்கு எதிர் காலத்தில் கண்டிப்பாக அவர்களை வைத்து நிச்சயம் ஒரு படம் செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் விரைவில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என ஒரு பிட்டை போட்டுள்ளார்.

இதுதான் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீண்டும் எப்போது சூர்யா ஜோதிகா இணைந்து நடிப்பார்கள் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
To Top