Connect with us
Cinemapettai

Cinemapettai

15 வருடங்களுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு..

simbu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

15 வருடங்களுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு..

பதினைந்து வருடங்களுக்கு முன் சிம்பு நடித்த படம் கோவில், இந்த படத்தை ஹரி இயக்கியிருந்தார், படமும் நன்றாக ஓடியது இப்பொழுது இதே கூட்டணி மீண்டும் இணையும் என செய்திகள் வந்துள்ளது

சூர்யா நடிப்பில் ஹரி இயக்குவதாக இருந்த படம் சில பிரச்சினைகள் காரணமாக கைவிடப்பட்டுள்ளது, மேலும் சூர்யாவுக்கு ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்கள் இழுத்துகொண்டிருந்ததால் சூர்யா ஹரி இணையாமல் பாதியில் கூட்டணி முறிந்தது.

தற்பொழுது சிம்பு எம்ஆர் ராதாவின் biopic படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், மேலும் கௌதம் கார்த்திக் படம் ஒன்றில் நடித்து வருகிறார், இந்த இரண்டு படங்கள் முடிந்த பின் ஹரியுடன் மீண்டும் இணைகிறார் என்ற செய்திகள் வந்துள்ளது, இதன் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வரும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top