Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் ஜோடியாக பிரபல நடிகை.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தனர்
Published on
தனுஷ் ஜோடியாக பிரபல நடிகை
சமீப காலமாக தனுஷ் நிறைய படங்களில் புக் ஆகி வருகிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா, அசுரன், துரை செந்திகுமாருடன் ஒரு படம் என தொடர்ந்து அவருடைய கால்ஷீட் புல்லாக இருக்கிறது.
இந்த நிலையிலும் அவருடன் நடித்த நடிகைகளை மறக்காமல் திரும்ப நடிக்க அழைத்திருக்கிறார். அதிலும் இவருடன் புதுப்பேட்டை படத்தில் இணைந்த நடிகை சினேகாவை அழைத்திருக்கிறார்.
கொடி படத்துகுபின் செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் தனுஷ். ஒருவர் அப்பா வேடத்தில் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக சினேகா இந்த படத்தில் நடிக்கிறார். வழக்கமாக இல்லாமல் சினேகாவுக்கும் இந்த படத்தில் அதிக முக்கியக் காட்சிகள் இருக்கிறதாம்.

sneha
