தமிழ் திரை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு ஜீவா செய்யும் மாபெரும் சாதனை.! வியப்பில் கோலிவுட்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தமிழ் திரை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு ஜீவா செய்யும் மாபெரும் சாதனை.! வியப்பில் கோலிவுட்.!

News | செய்திகள்

தமிழ் திரை வரலாற்றில் 12 வருடங்களுக்கு பிறகு ஜீவா செய்யும் மாபெரும் சாதனை.! வியப்பில் கோலிவுட்.!

ஆர்.பி.சௌத்ரியின் மகன் தான் நடிகர் ஜீவா இவர் 2003 ஆம் ஆண்டில் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார், இவர் இதுவரை 30 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் இவர்.

jeeva

இவர் கற்றது தமிழ்,ராம் என்ற தரமானபடங்களிலும் சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை போல ஜாலியான படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.இப்பொழுது தமிழ் சினிமாவில் வரலாற்று காணாத விஷயத்தை செய்யபோகிறார் நடிகர் ஜீவா.

jeeva

அது என்னவென்றால் ஒரே நாளில் தனது இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய இருக்கிறார், கலகலப்பு 2 மற்றும் கீ என்ற இரண்டு படத்தையும் பிப்ரவரி 9 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. 

இதற்க்கு முன் நடிகர் பரத் தான் இதுமாதிரி ஒரே நாளில் இரண்டு படத்தை ரிலீஸ் செய்தார் வெயில் மற்றும் சென்னை காதல் என்ற இரண்டு படங்களும் டிசம்பர் 9 ஆம் தேதி 2006 ல் வெளியது குறிப்பிடத்தக்கது.

kee

kee

 

அதற்க்கு பின் எந்த நடிகரும் இதுமாதிரி ரிலீஸ் செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே அதேபோல் கடந்த வருடத்தில் விஜய் சேதுபதி நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக இருந்தது ஆனால் வசூல் பாதிக்கும் என வெவ்வேறு தேதிகளில் ரிலீஸ் செய்தார்கள். இதுவரை எந்த நடிகரும் செய்யாததை 12 வருடங்களுக்கு பிறகு ஜீவா செய்வதால் கோலிவுட் வட்டாரங்கள் வியப்பில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top