பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

t-rajender
t-rajender

தமிழ் சினிமாவில் ஒரே துறையில் மட்டுமே சாதிக்கும் பல கலைஞர்களுக்கு மத்தியில் நடிகராக, தயாரிப்பாளராக, பாடகராக, ஒளிப்பதிவாளராக, இசையமைப்பாளராக என பல அவதாரம் எடுத்தவர் டி ராஜேந்தர். டூயட் பாடினால் கூட சக நடிகையை தொடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதிலும் அவரின் வசனத்துக்கே ரசிகர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். 2007ம் ஆண்டு கடைசியாக வீராசாமி படத்தை இயக்கி இருந்தார். அவரே நாயகனாக நடித்த இப்படத்தில் நடிகை மும்தாஜ் நாயகியாக நடித்திருந்தார். ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் சொல்லும்படியான வெற்றியை படம் பெற்று இருந்தது.

இப்படத்தை தொடர்ந்து டி.ஆர் எந்த படத்தையும் இயக்கவில்லை. அரசியலில் தன் கவனத்தை திருப்பி இருந்தார். இதை தொடர்ந்து. கடந்த வருடம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கவண் படத்தில் முக்கிய வேடமேற்றார். கே.வி.ஆனந்த் இயக்கிய இப்படத்தில் மடோனா செபாஸ்டியன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, சந்தானம் நடிப்பில் வெளியாகிய சக்கப் போடு போடு ராஜா படத்தில் வா முனிம்மா என தொடங்கும் பாடலை மனைவியுடன் இணைந்து பாடியிருந்தார். இப்படத்திற்கு அவரின் மகனும், நடிகருமான சிம்பு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

t-rajender
t-rajender

இந்நிலையில், டி.ராஜேந்தர் 11 வருடம் கழித்து புது படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. அவரே தயாரிக்கும் இப்படத்தின் நாயகன் – நாயகிக்காக புதுமுகங்கள் தேடுதல் வேட்டை தொடங்கி நடைபெற்று வருகிறது. கோலிவுட்டின் பிரபல காமெடி நடிகர்கள் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. மேலும், நடிகை நமீதாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.