இயக்குனர் அட்லி தளபதி கூட்டணியில் இணைந்து பிரமாண்டமாக எடுத்த படம் மெர்சல் இந்த படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் ஹிட் ஆனது இதனை தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்தது இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்தார்.

mersal-box

விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன்,காஜல் ,சமந்தா என மூன்று நடிகைகள் நடித்தார்கள்,வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தினார்.மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இதற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

mersal

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் கடந்த வருடத்தில் நல்ல வசூல் செய்த படத்தில் மெர்சல் படமும் ஓன்று.

mersal

இந்த படத்திற்கு பல விருதுகள் கொடுத்து அசத்தினார்கள் மேலும் சமீபத்தில் நார்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்ததாக செய்திகள் வந்தன மெர்சல் பாடல் எப்படி ரசிகர்கள் ரசித்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

mersal

இந்த படத்தின் பாடல் உரிமையை ஏர்டேல் நிறுவனம் வாங்கியது இந்த படத்தின் பாடல் பதிவிறக்கத்தில் ஆளப்போறான் என்ற பாடல் முன்னணியில் இருக்கிறது இந்த தகவலை அதிகாரபூர்வமாக அந்த நிறுவனமே அறிவித்துள்ளது இது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.