fbpx
Connect with us

வைரலாகுது பாகிஸ்தான் லீக்கில் அப்ரிடி செய்த செயல் ! பாராட்டும் நெட்டிசன்கள் !

News | செய்திகள்

வைரலாகுது பாகிஸ்தான் லீக்கில் அப்ரிடி செய்த செயல் ! பாராட்டும் நெட்டிசன்கள் !

ஷாஹித் அப்ரிடி

தமிழ் சினிமாவில் கமல் ஒரு மார்க்கண்டேயன் என்றால் கிரிக்கெட் உலகில் அப்ரிடி தான் மார்க்கெண்டேயன். பல ஆண்டுகளாக ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டராக கலக்கியவர். அப்ரிடி 38 வயதை நெருங்கிவிட்டார். சர்வேத கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விட்டார். உலகெங்கிலும் உள்ள டி 20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

பாக்கிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் துபாயில் நடக்கிறது. இதில் அப்ரிடி கராச்சி கிங்ஸ் அணியில் விளையாடுகிறார்.  இந்த சீசனில் 13 விக்கெட் எடுத்ததன் மூலம், டி20 போட்டியில் 300 விக்கெட் எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தன் ஆரம்ப காலம் முதலே மிகவும் ஆக்ரோஷமான வீரராக திகழ்ந்தவர் அப்ரிடி. விக்கெட் எடுத்தால் ஸ்டைலாக கொண்டாடுவர் இவர்.

Afridi-Misbah

எனினும் சமீபத்திய போட்டியில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருந்த வேலையில், அப்ரிடி பந்து வீசினார். அப்போது அவரது பந்தில் மிஸ்பா க்ளீன் போல்ட் ஆக்கினார். தன் ஸ்டைலில் கொண்டாட முற்பட்ட அப்ரிடி, பின் என்ன நினைத்தாரோ, தன் முன் நாள் கேப்டன் மீது கொண்ட மரியாதையின் காரணமாக அப்படியே நிறுத்திவிட்டார். அமைதியாக தன் அணியின் மற்ற வீரர்களை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.

இதோ வீடியோ லிங்க் கீழே

அப்ரிடி, தனது முன்னாள் கேப்டனுக்கு செய்த மரியாதை, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top