Sports | விளையாட்டு
“37 பாலில் சதம் அடித்தது நான்தான், ஆனால் பேட் இவருடையது”- அப்ரிடி சொல்லிய சுவாரஸ்ய தகவல்.
கிரிக்கெட் உலகின் மார்க்கெண்டேயன் ஷாஹித் அப்ரிடி, வாஜித் கான் என்பவருடன் இணைந்து இவர் வாழ்கையை பற்றி GAME CHANGER என சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புக்கில் தனது உண்மையான வயது, தனது நாட்டு வீரர்கள், கேப்டன், கோச்சு மற்றும் பிறநாட்டு வீரர்கள் பற்றியும் எழுதியுள்ளார். சுவாரஸ்ய நிகழுவுகளை விட அடுத்தவரை சாடுவது, குறை கூறுவது போன்றவையே அதிகம் உள்ளது.
1996-ம் ஆண்டு தனது 2-வது ஒருநாள் போட்டியில் 37 பந்தில் சதம் அடித்து ரெக்கார்ட் செய்தார். சச்சினின் பேட்டை பயன்படுத்தி தான் அந்த சத்தத்தை அடித்ததாக சுயசரிதையில் “கேம் சேஞ்சர்” தெரிவித்துள்ளார்.
“வக்கார் யூனிஸ்க்கு பிடித்தமான வீரர் டெண்டுல்கர். தனது பேட்டை ஒன்றை வக்கார், கேட்க யூனிஸிடம் கொடுத்திருந்தார் சச்சின். வக்கார் யூனிஸ் அந்த பேட்டை என்னிடம் கொடுத்தார். அதைக்கொண்டு தான் பயிற்சியில் ஈடுபட்டேன். எனது முதல் சதம் அந்த பேட்டால் தான் நிகழ்ந்தது.” என கூறியுள்ளார்.
அப்போட்டியில் அப்ரிடி 40 பந்தில் 102 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 11 சிக்சர்களும் அடங்கும். ஜெயசூர்யா, முரளிதரன், தர்மசேனா, வாஸ் பந்துவீச்சில் இந்த சாதனையை புரிந்தார் அவர்.
