Sports | விளையாட்டு
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.! சீண்டிய இளம் வீரருக்கு பதிலடி கொடுத்த அப்ரிடி
இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் லங்கன் பிரீமியர் லீக் போட்டி என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து நாட்டு வீரர்களும் விளையாடி வருகின்றனர்.
இந்த பிரீமியர் லீக்கில் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், சண்டிமால் சாகித் அப்ரிடி போன்றவர்கள் விளையாடி வருகின்றனர். அனைத்து போட்டிகளும் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி நடந்து வருகிறது.
இதில், பாகிஸ்தான் முன்னாள் அதிரடி மன்னன் சாகித் அப்ரிடி இளம் வீரர் ஒருவரை கண்டிக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. போட்டியின் நடுவே இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.
லங்கன் பிரீமியர் லீக்கில் நடைபெற்ற அந்த போட்டியில் கண்டி தஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதின இதில் அப்ரிடி தலைமையிலான கிளாடியேட்டர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கண்டி தஸ்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் வீரர் நவீன் உல் ஹக்கிற்கும் அப்ரிடிக்கும் இடையே மோதல் வெடித்தது. போட்டியின் முடிவில் இரு வீரர் கைகுலுக்கிக் கொள்ளும் போது அப்ரிடி அவரிடம் சென்று தம்பி நீ பிறப்பதற்கு முன்பு நான் இன்டர்நேஷனல் போட்டியில் சதம் அடித்தவன் என்னிடம் மோதாதே என்று கூறியுள்ளார்.

Afridi-cinemapettai.jpg
