இப்பொழுது விஜய் மெர்சல் படத்தை முடித்துவிட்டு சிறிது ஓய்வு எடுப்பதற்காக வெளிநாடு பறந்துள்ளார்.மெர்சல் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது இதை கண்டுகளிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.mersal audio teaser 1

விஜய்யின் மெர்சல் படம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. பட டீஸர் நாளை செப்டம்பர் 21ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறது.இந்த நிலையில் பிரபல புகைப்பட கலைஞர் வெங்கட் ராமன் படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசும்போது அவர், மெர்சல் பட ஃபஸ்ட் லுக்கிற்காக விஜய் மற்றும் அட்லீ இருவருமே மிகவும் பயந்து கொண்டிருந்தனர்.

ஏனெனில் படத்திற்காக வெளியாக போகும் முதல் போஸ்டர் என்பதால். 10 மணிக்கு ஷுட்டிங் என்றால் விஜய் 8.30 மணிக்கே வந்து மேக்கப் எல்லாம் போட்டு தயாராகி விடுவார். முதல் ஃபஸ்ட் லுக்கிற்காக 2000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அதில் அனைத்திலும் இருந்து 2, 3 போஸ்டர் தேர்ந்துக்கப்பட்டது.

காளை தனியாகவும், விஜய்யை தனியாகவும் எடுத்து அதை ஒன்றாக இணைத்தோம். இறுதியில் ஃபஸ்ட் லுக் மிகவும் நன்றாக வந்ததும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷமான இருந்தது என்று கூறியுள்ளார்.