ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது ஐசிசி. வரும் ஜூன் 14 பெங்களுருவில் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை அவர்கள் இந்தியாவிற்கு எதிராக ஆட உள்ளனர். போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே இந்தியா வந்த இந்த டீம், பங்களாதேஷுக்கு எதிராக மூன்று டி 20 ஆடி, அதில் வெற்றியும் அடைந்தனர்.

rashid khan

முதல் இரண்டு போட்டிகளில் சுலபமாக வெற்றி பெற்றனர். எனினும் மூன்றாவது போட்டி மிக த்ரில்லாக சென்றது. கட்சி ஓவரை ரஷீத் கான் வீசினார், ஜெயிக்க ஒன்பது ரன் தேவை என்று இருந்தது. எனினும் அசத்தல் பௌலிங், பீல்டிங் என்று அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி.

மேலும் அவர்கள் பங்களாதேஷால் நிதாஸ் கோப்பையில் பிரபலப்படுத்தப்பட்ட நாகின் டான்ஸ் வேறு ஆடி பங்களாதேஷ் அணியை வெறுப்பேற்றினர்.