ஆப்கானை கைப்பற்றிய தாலிபான்கள்.. தப்பி விடலாம் என விமானத்திலிருந்து விழுந்து பலி

20 வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தது தாலிபான் இயக்கம். தாலிபான்கள் பற்றிய பல்வேறு தவறான சிந்தனைகள் மக்களிடத்தில் இருந்தாலும் இத்தனை வருட காத்திருப்பிற்கு கிடைத்த வெற்றியாக்கருதுகிறது தாலிபான் அமைப்பு.

ஆப்கானிகளின் பூர்வ சமயமான இஸ்லாமை ஆதரிக்கும் தாலிபான்கள் பல்வேறு நாடுகளில் நடக்கும் தீவிரவாத பயங்கரவாத குற்றச்வசயல்களில் தொடர்புடைய அல்கொய்தாவுடன் தொடர்பில் இருந்தது.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புகளுடன் வைத்திருந்த தொடர்புகளையும் முறித்து விட்டதாக கூறியதை அடுத்து ஆப்கான் அரசாட்சிக்கு துணையாக இருந்த அமெரிக்க படைகளும் பன்னாட்டு கூட்டுப்படைகளும் கடந்த டிரம்ப் ஆட்சியிலிருந்தே பின்வாங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மற்றும் அமைதி ஒப்பந்தங்களின் அடிப்படையில் வெறிநாட்டு இராணுவங்களை தாக்காத கட்டுக்கோப்பாலும் அமைதி ஒப்பந்தத்தில் கூறியபடி வெளியறியது அமெரிக்கா.

மே-31 2021ல் ஒட்டு மொத்த படைகளையும் திரும்ப பெறுவதாய் கூறியிருந்த அமெரிக்கா ஜூன் மாதத்தில் செய்தும் முடித்தது. அதனை தொடர்ந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்ட தாலிபான் போராளிகள் இரு தினங்களுக்கு முன்பே காபூலை வட்டமிட்டனர்.

ஆயுதங்கறால் தலைநகரை கைப்பற்ற விரும்பவில்லை என்ற அறிக்கையில் அதிர்ந்த ஆப்கானிஸ்தான் அரசு ஆட்சியை பறிகொடுத்தது. ஆட்சியில் இருந்த பிரதமர் அஷ்ரப் கனி உட்பட பல்வேறு முக்கிய நபர்களும் கஜிகிஸ்தானுக்கு தனி விமானத்தில் தப்பியதாக தகவல்கள் வெளியாகின.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்