பதற்றத்தில் மக்கள்.. 73 விமானத்தை தகர்த்து விட்டுச் சென்ற அமெரிக்கா.!

கடந்த மாதம் வரை ஆப்கான் அரசின் வசம் இருந்த பகுதிகள் யாவும் எதிரிகள் வசமானது. பஞ்சாராஸ் என்கிற குறிப்பிட்ட பகுதி மட்டும் இப்போது வரை தனியாக இருந்து வருகிறது அங்கு இருக்கும் மக்கள் யாரும் தாலிபான்களுக்கு அச்சப்படாமல் இருக்கும் வகையில் அப்பகதியின் கட்டமைப்பு உள்ளது.

எதிரிகள் கள் காபூல் தலைமையகத்தில் புகுந்து அரசு கட்டுப்பாடுகளை முடக்கியதிலிருந்து எதிரிகள் வசமானது ஆப்கானிஸ்தான். தொடர்ந்து அமெரிக்க கூட்டுப்படைகளை வெளியேறக்கூறி தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தது.

தாக்குதல்களில் இருபுறமும் சேதம் விளைந்தாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் என்னவோ அப்பாவி மக்கள் தான். கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் நிச்சயம் தக்க பதிலடி தர தயங்கமாட்டோம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆப்கானின் காபூல் விமான நிலையத்தின் பதட்ட நிலையை மாற்றுவதற்காக அமெரிக்க படைகளின் எஞ்சி இருந்த சில சிறப்பு படை வீரர்களும் அரசின் ஆணைக்கினங்க வெளியேறினார்கள். அரசின் கட்டளைப்படி 73 ராணுவ விமானங்களையும் தகர்த்து விட்டு இரவோடு இரவாக அமெரிக்கா நோக்கி விரைந்தனர் அமெரிக்க படை வீரர்கள்.

அடுத்த நடவடிக்கை என்னவாய் இருக்கும் என்கிற பதட்டத்தில் மக்கள் இருக்க காபூல் விமான நிலையத்தையும் கைப்பற்றிய நிகழ்வை வானை நோக்கி சுட்டு கொண்டாடி வந்தனர் எதிரிகள்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்