Sports | விளையாட்டு
இந்திய ஸ்பின்னர்களை விட எங்கள் ஸ்பின்னர் தான் சிறந்தவர்கள் – வாய் சவடால் விடும் ஆப்கானிஸ்தான் கேப்டன் !
ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது ஐசிசி. வரும் ஜூன் 14 பெங்களுருவில் தங்கள் முதல் டெஸ்ட் போட்டியை அவர்கள் இந்தியாவிற்கு எதிராக ஆட உள்ளனர்.
போட்டிகள் துவங்குவதற்கு முன்னரே இந்தியா வந்த இந்த டீம், பங்களாதேஷுக்கு எதிராக மூன்று டி 20 ஆடி, அதில் வெற்றியும் அடைந்தனர். தற்பொழுது இந்த அணி தங்கள் முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டெஸ்ட் ரேங்கிங்கில் நான்காவது, ஐந்தாவது இடத்தில இருக்கும் ரவீந்திரா ஜடேஜா, அஸ்வின் அவர்களை விட தன் ஸ்பின்னர்கள் தான் பெஸ்ட் என்று ஆப்கான் கேப்டன் ஆஷ்கார் ஸ்டைன்கசய் பேட்டி கொடுத்துள்ளார்.
ஆஷ்கார் ஸ்டைன்கசய்
“உலகிற்கே தெரியும் ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், மொஹமட் நபி, ரஹமத் ஷா, ஜாஹிர் கான் திறமையை பற்றி. ஆப்கானிஸ்தானில் நிறைய இளம் ஸ்பின்னர்கள் உருவாக்கி வருகிறார்கள். ராஷித் கான், நபி அவர்களை தான் பின் பற்றுகிறார்கள். அதனால் எங்கள் ஸ்பின் டிபார்ட்மென்ட் ஸ்ட்ரோங்க் ஆக உள்ளது. என்னை பொறுத்தவரை எங்கள் ஸ்பின்னர்கள், இந்திய ஸ்பின்னர்களை விட சிறந்தவர்கள். ” என்று கூறியுள்ளார்.
அஹமட் ஷெஹசாட்
ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன். அவர் கூறியதாவது “எங்கள் ஸ்பின்னர்கள் சமீபமாக நன்றாக விளையாடி வருகின்றனர். சமீபத்தில் ஐயர்லாந்து , தங்கள் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் நன்றாக ஈடு கொடுத்து விளையாடினர். நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்திய அணி நன்றாக ஸ்பின் ஆடுபவர்கள். எந்த டீமுக்கும் ஈஸியாக அமைந்து விடாது. இருவரும் கடினமாகவே ஆடுவோம். ஆட்டம் சிறப்பானதாக அமையும்.
இந்தியாமட்டுமன்றி, உலகமுழுவதும் எங்கள் ரஷீத் கான் தான் நம்பர் ஒன்.” என்று கூறியுள்ளார்.
மொஹமட் நபி
சீனியர் வீரர் மொஹமட் நபி பேசுகையில் “மற்ற லெக் ஸ்பின்னர்களை விட வித்தியாசமானவர். அவர் காற்றில் வேகமாக பந்தை வீசுபவர். அவர் கை ஸ்பீட் ஜாஸ்தி, அதனால் அவரை எளிதில் யாரும் ஜட்ஜ் செய்ய முடியாது.” என்று கூறியுள்ளார்.
