தனக்கும் சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு என்று பரவிய வதந்தி குறித்து நடிகை ஹூமா குரேஷி விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் அனுராக் கஷ்யப்பின் கேங்ஸ் ஆஃப் வாசீபூர் இந்தி படம் மூலம் நடிகையானவர் ஹூமா குரேஷி. அவருக்கும் அனுராக் கஷ்யப்புக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக முதலில் பேசப்பட்டது.

இதை ஹூமா முற்றிலும் மறுத்தார்.

சொஹைல் கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் தம்பி சொஹைல் கானுக்கும், ஹூமாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளது என்று பாலிவுட்டில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஹூமா

எனக்கும், சொஹைல் கானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இல்லை. இது போன்ற வதந்திகள் பரவுவது துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து நான் சமூக வலைதளங்களிலும் விளக்கம் அளித்து வருகிறேன் என்கிறார் ஹூமா.

அண்ணன்

சொஹைல் கான் எனக்கு அண்ணன் போன்றவர். அவருடன் என்னை சேர்த்து வைத்து பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது. கள்ளத்தொடர்பு வதந்தி எப்பொழுது பரவினாலும் அது குறித்து நான் சமூக வலைதளங்களில் விளக்கம் அளிக்கிறேன் என ஹூமா தெரிவித்துள்ளார்.

குடும்பம்

என் குடும்பத்திற்கு என்னை பற்றி நன்கு தெரியும். அதனால் வதந்திகள் பற்றி எனக்கு கவலை இல்லை. வதந்தி பரப்புவோர் பரப்பட்டும் என்று கண்டுகொள்வது இல்லை என ஹூமா கூறியுள்ளார்.