லதா புரொடெக்சன்ஸ் சார்பில்  எம்.லதா, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ஏமாலி’. சமுத்திரக்கனி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் மற்றும் அதுல்யா ரவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, இந்த ‘ஏமாலி’ படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் டீஸர் நவம்பர் 3  ரிலீஸ் ஆனது. இன்றைய இளம் தலைமுறையினர் காதல், காமம், உறவு முறைகளை எப்படி பார்க்கிறார்கள் என்பது மாதிரியான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. டீஸர் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் வைரல் ஆனது. இதற்கு மிக முக்கிய காரணம் அதுல்யா ரவி தான்.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே  படத்தின் வாயிலாக  அறிமுமானவர் அதுல்யா ரவி. அந்த படத்தில் பக்கத்துக்கு வீட்டு பெண் போல மிக சிம்பிளான மேக் அப், உடைகள் என்று பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்தார். இது வரை சுடிதார், புடவை போன்ற உடைகளில் இவரை பார்த்தவர்கள், மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்ததும், மிக பெரிய ஷாக்.

Athulya Smoking Scene

அதுல்யா கழிப்பறையில் அமர்ந்து சிகரெட் புகைக்கும் காட்சியும், கவர்ச்சி உடை அணிந்து கண்ணாடி முன்  அழகை காட்டும் காட்சி, நடு விறல் சமாச்சாரம் என்று டீஸர் வேறு விதமாக அமைந்தது. டீசர் வெளியானது முதல் அதுல்யாவை பேஸ்புக்கிலும், டுவிட்டரில் கடுமையாக விமர்சித்தார்கள் ரசிகர்கள்.

Athulya Dress Change

ஆனால் மற்றோரு புறம் இவர் புல்லட் ஓட்டும் அழகு, முடியை கோதும் ஸ்டைல் என்று இவரை பாராட்டியும், படம் வெற்றி பெற வாழ்த்தியும் மெசேஜ் செய்தவர்களும் ஏராளம்.

அதுல்யாவின் பதில் இது தான்

“எனக்காக பாசிட்டிவாக பேசியவர்களுக்கும், புரிந்து கொண்டவர்களுக்கும் என் நன்றிகள். வெறும் டீஸர் பார்த்து விட்டு படத்தையோ அந்த கதாபாத்திரத்தை பற்றியோ முடிவுக்கு வராதீர்கள். படத்தில் நல்ல கருத்தும் உள்ளது, அந்த மாதிரி  காட்சிகளால் சிலர் கடுப்பாகியுள்ளனர், அவர்களுக்கு சாரி. அக்காட்சிகள் படத்தில் இடம் பெறாது. எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நான் நடித்தேன்.” என்று தன் பேஸ் புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் எழுதினார்.

பின்னர் ட்விட்டரிலும் தனக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

Athulya Ravi Facebook Status

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

இவ்வாறு எதிர்மறை விமர்சனங்கள் வருவது முதல் முறை என்பதால், எமோஷனல் ஆகி விளக்கம் தந்துள்ளார் அதுல்யா என்றே தோன்றுகிறது. தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும், நீங்க போய் உங்க வேலைய மட்டும் பாருங்க மேடம். இதுவும் கடந்து போகும்.