Videos | வீடியோக்கள்
சில்லு கருப்பட்டி இயக்குனரின் ஏலே ட்ரைலர்- ஐஸ் மாமா, அடாவடி அப்பாவாக சமுத்திரக்கனி
ஓரம் போ ஆட்டோ, வ குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா படங்களை இயக்கிய கணவன் மனைவி ஜோடி தான் புஷ்கர் மற்றும் காயத்ரி. இவர்கள் கூட்டணியில் வால் வாட்சர் பிலிம்ஸ், சசிகாந்த்தின் y not ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்த தயாரிப்பில் தான் பூவரசன் பீபி, சில்லு கருப்பட்டி படங்களை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கும் அடுத்த படம் முடிவானது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, மதுமிதா மற்றும் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வஸ்ர். இசை அருள் தேவ், கபீர் வாசுகி. எடிட்டிங் ரேமண்ட் டெரிக் கிராஸ்டா மற்றும் ஹலீதா ஷமீம் கவனித்துள்ளனர்.
இப்படத்தை பிப்ரவரி 12 திரை அரங்கில் ரிலீஸ் செய்ய இந்த டீம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல லைக்ஸ் குவித்து வருகின்றது.
சமுத்திரக்கனியின் மறைவுக்கு பின் நடக்கும் நிகழ்வுகள் தான் படம். அப்பாவாக அவர் பண்ணிய வேலை, சேட்டைகளை மகன் மணிகண்டன் பார்வையில் படமாக தந்துள்ளனர்
