kamal-hassanகமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ராஜீவ்குமார் இயக்கவுள்ள ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஜாதியின் பெயரில் டைட்டில் வைத்தது ஏன் என்பது குறித்து ஏற்கனவே கமல் விளக்கம் அளித்துவிட்ட நிலையில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாரும், வானூர் தொகுதியின் வேட்பாளருமான ரவிக்குமார் இந்த பட டைட்டில் குறித்து கமல்ஹாசனுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  கமல் படத்தில் ஏற்படும் சில அதிரடி மாற்றங்கள்!

ரவிகுமார் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலை விரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும். முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  11 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் கம்போசிங் செய்த இளையராஜா..!

ரவிகுமாரின் அறிவுரையை ஏற்று கமல் டைட்டிலை மாற்றுவாரா? அல்லது வழக்கம் போல் பிரச்சனைகளை சமாளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.