சமுத்திரக்கனியின் சாட்டை 2 ட்ரைலர்.. இந்த முறை ஸ்கூல் இல்ல.. காலேஜ்

சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த சாட்டை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  முக்கியமாக பெற்றோர்களுக்கு அடிப்படைக் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்பதை தத்ரூபமாக வெளிக்கொண்டு வந்திருக்கும் திரைப்படம்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் டிரைலர் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  கல்வியை காசுக்காக விற்கும் இந்த சமூகத்தில் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது போன்ற சமூக கருத்துக்களை கொண்டு இந்த ட்ரெய்லர் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சமுத்திரக்கனியின் திறமையான நடிப்பு மற்றும் தம்பி ராமையாவின் இயல்பான  நடிப்பை பார்க்கும் போது இந்த திரைப்படம் மக்களிடையே கண்டிப்பாக வரவேற்பை பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

Leave a Comment