தமிழ் சினிமாவின் இன்றைய நிலை:

இன்றைய தேதியில் தமிழ்  திரையுலகம் சற்றே மோசமான சூழலில் தான் தவித்துக்கொண்டு இருக்கிறது. ஒருபுறம் சினிமா டிக்கெட் அதிகரிப்பால் மக்கள் திரையரங்கு செல்வது குறைந்து வருகிறது, மறுபுறம் தமிழ் ராக்கர்ஸ் படத்தை திருட்டு பிரிண்ட் இறக்கிவிடுவதால் தங்கள் கைபேசியில் மிக எளிதாக டவுன்லோட் செய்து பார்த்து விடுகின்றனர். இதனால் சினிமாவை நம்பி உள்ளவர்கள் நிலைமை படாத பாடு தான்.

மாறும் ட்ரெண்ட்:

மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்வது தான் சரி. காதல், ஆக்ஷன், காமெடி, ஹாரர் என்று ட்ரெண்ட் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த வரிசையில் தற்ப்பொழுது திரில்லர் படமும், காமெடி படங்களுக்கான சீசன் இது என்று தான் சொல்ல வேண்டும்.

ஏ செர்டிபிகேட் படங்கள்:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதீத சண்டைக்காட்சிகள் அல்லது கவர்ச்சி நிறைந்துள்ளது என்றால் ஏ செர்டிபிகேட் உடன் ரிலீஸ் செய்வது தான் மரபு. பாலச்சந்தர் காலத்தில் இருந்து, பாக்யராஜ், கமல் காலத்திலும்  தொடர்ந்து, நம் எஸ்.ஜே.சூர்யா சூர்யா வரை  அடல்ட் ஒன்லி சமாச்சாரங்களை வைத்து  ஹிட் படம் கொடுத்துள்ளார்கள்.

அடல்ட் காமெடி:

ஹாலிவுட்டில் அடல்ட் காமெடி படங்கள் நிறைய வரும், அதுவும் ஹிட் அடிக்கும். ஏனோ நம் கோடம்பாக்கத்தில் பல இயக்குனர்கள் இந்த ஜானரை தொட்டதில்லை. பிளாக் அண்ட் வைட் காலத்தில் இருந்து தற்ப்பொழுது உள்ள டிஜிட்டல் காலம் வரை இரட்டை அர்த்த வசனங்கள் பல படங்களில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் முழு  அடல்ட் காமெடி படங்கள் குறைவு தான்.

திரிஷா இல்லனா நயன்தாரா:

அடல்ட் காமெடிக்கு என்று ட்ரெண்ட் செட்டராக அமைந்த படம் திரிஷா இல்லனா நயன்தாரா. ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம், படக்குழு எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் ஆனது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்படத்தை விரும்பி பார்த்தனர்.

ஹர ஹர மஹாதேவகி:

தற்பொழுது இந்த ஜானரில்  வந்த இப்படமும் சூப்பர் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். இதனால் தற்ப்பொழுது சில  படத் தயாரிப்பாளர்கள் இந்த திசையில் தங்கள் கவனத்தை திரும்பியுள்ளனர். ஏனென்றால் இளசுகள்  தான் டிக்கெட் விலையை பொருட்படுத்தாது தியேட்டர் வருபவர்கள், மேலும் படம் பிடித்து விட்டால் இவர்கள்  ரீப்பேட் ஆடியன்ஸாக வரவும் செய்யவார்கள்.

ஜெயிக்கிற குதிரை:

பிங்கி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் ‘ஜெயிக்கிற குதிரை’. இதில் நாயகனாக ஜீவன், நாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்சி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஷக்தி சிதம்பரம் தான் இப்படத்தின் இயக்குனர். விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்திற்கு படக்குழு ஏ செர்டிபிகேட் கொடுங்கள் என்று சென்சார் போர்டு இடம் கேட்டதாக தகவல் கசிந்துள்ளது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: எது எப்படியோ காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இருட்டு அறையில் முரட்டு குத்து.

#Next #Bajanai #iruttuaraiyilmurattukuthu #IAMK #GautamKarthik

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on