Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.! இப்படி அவார்ட் மிஸ் பண்ணிடறே பீல் பண்ணும் ரசிகர்கள்.!
2011ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஆடுகளம், இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார், படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்திருந்தார், ஹீரோவாக தனுஷும் ஹீரோயினாக டாப்ஸி நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் 2011ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷிற்கும் சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றிமாறனுக்கும், சிறந்த கதைக்கான விருது வெற்றிமாறனுக்கும் சிறந்த நடன இயக்குனருக்கான விருது தினேஷ்குமார்க்கும் கிடைத்தது.
இந்த திரைப்படத்தின் மூலம் தான் தனுஷ தமிழ் சினிமாவில் அடுத்த லெவலுக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரிந்தது, இந்த நிலையில் ஆடுகளம் படத்தில் முதலில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக டேனியல் பாலாஜியை தான் வெற்றிமாறன் முயற்சி செய்தார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

adukalam1
ஆனால் டேனியல் பாலாஜி எனக்கு வயதான கெட்டப் போட்டு வயதானவராக காட்டுவதைவிட வேறு ஒரு வயதானவரை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என கூறினார் அவர் அப்படி சொன்ன பிறகு தான் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் வயதானவரை நடிக்க வைத்தார்களாம், அந்த கதாபாத்திரத்தில் பேட்டைக்காரனாக நடித்தவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Actor Daniel Balaji at Mithivedi Press Meet Stills
ஆனால் இந்த கதாபாத்திரம் டேனியல் பாலாஜி நடித்திருந்தால் அவருக்கு விருது கிடைத்திருக்கும் சினிமாவில் நல்ல பெயரும் கிடைத்திருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
