Connect with us

Cinemapettai

ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்த, பிரபல இசையமைப்பாளரின் ஒரு வயது மகள். ட்விட்டர் வைரல்.

Cinema News | சினிமா செய்திகள்

ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்த, பிரபல இசையமைப்பாளரின் ஒரு வயது மகள். ட்விட்டர் வைரல்.

ஏ ஆர் ரஹ்மான்

இசைப்புயல் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை விட்டுவிட்டு ஹாலிவுட், ட்ராமா என்று இசை அமைக்க வெளிநாடு பறந்துவிட்டார். தற்பொழுது தான் மீண்டும் நிறைய படங்களில் கமிட் ஆகி வருகிறார். சர்கார் இசை வெளியீடு முடிந்த நிலையில் மனிதர் 2.0 பணிகளில் பிஸியாக உள்ளார்.

ar rahman

ar rahman

அட்னான் சமி

பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல அவதாரம் உண்டு இவருக்கு. சில வருடங்களுக்கு முன் தன உடம்பை குறைத்து ஸ்லிம் ஆக மாறி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.

adnan-sami

சமீபத்தில் இவருக்கும் ரஹ்மானுக்கு இடையை நடந்த ட்விட்டர் சம்பாஷணை இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது.

“ஐ பேட், போனுக்கு பாஸ்வேர்டு போடும் நேரம் வந்துவிட்டது. என் குழந்தை மெடினா என் போனை எடுத்து ஏ.ஆர். ரகுமானுக்கு வீடியோ கால் செய்து அழகாக பேசியுள்ளார். அதுவும் லண்டனில் அவர் 2 . 0 படத்திற்கு இசை கோர்ப்பு பணியில் இருந்தபொழுது. அவரும் தன் ஸ்டுடியோவை இவளுக்கு காமித்துளார். அம்சம்.” என்று பதிவிட்டார்.

இதற்கு பதிலாக ரஹ்மான் “அட்னன்… அவளின் வீடியோ கால் என் மோசமான மனநிலையை மாற்றியது. நன்றி மெடினா. கடவுள் உங்களை தாராளமாக ஆசீர்வதிப்பாராக ” எனப் பதிவிட்டார்.

பதிலுக்கு ” எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவரின் மனநிலையை மாற்றும் திறன் அவளுக்கு உள்ளது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். உங்களின் ஆசி மெதினாவுக்கு மிக்க முக்கியமான ஒன்று. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் என் அன்புகளை தெரிவிக்கிறேன் சகோதரா.” என்று தன்னடக்கத்துடன் பதில் அளித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top