திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்எல்ஏ-க்களுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைமை அலுவலகத்திலேயே அவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், 131 எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டுள்ளனர் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

ஆனால், 110-க்கும் குறைவான எம்.எல்.ஏக்கள்தான் பங்கேற்றதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதனிடையே, எம்.எல்.ஏ-க்கள் 93 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், எம்.எல்.ஏ-க்கள் 41 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. அதேபோல், மொத்தம் 131பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 129 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், சுமார் 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களின் ஆதரவு பன்னீர்செல்வதிற்கு உள்ளது என தகவல்கள் வெளி வந்தாலும், உண்மை நிலவரங்கள் இரு தரப்பிலும் இதுவரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்எல்ஏ-க்களுக்கு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைமை அலுவலகத்திலேயே அவர்களுக்கு மதிய உணவை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அவர்கள் அனைவரும் அங்கேயே தான் இருப்பார்கள் என தெரிகிறது.

அதிமுக தலைமைக்கு எதிராக அதிருப்தி தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என கூறியுள்ளதால், எம்எல்ஏ-க்கள் விலை போய் விடாமல் பாதுகாக்க வேண்டிய சூழல் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.