Connect with us

Cinemapettai

அதிமுக எம்.எ.ல்.ஏ. வுக்கு ஆந்திராவில் என்ன வேலை? ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி செயல்

jagan-mohan-reddy

Politics | அரசியல்

அதிமுக எம்.எ.ல்.ஏ. வுக்கு ஆந்திராவில் என்ன வேலை? ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி செயல்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு பேரை நியமித்து அதிரடி செய்துள்ளார், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சியில் 16 பேர் கொண்ட குழு ஒன்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமித்தார். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி, பழைய குழுவை கலைத்துவிட்டார். அதன் பிறகு சுப்பையா ரெட்டியை அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்தார்.

tirumala

tirumala

தற்போது அறங்காவலர் குழுவில் புதிதாக 24 உறுப்பினர்களை நியமித்தது ஆந்திரா அரசு. ஆந்திர அறநிலையத்துறை தலைமைச் செயலாளர், அறநிலையத்துறை ஆணையர், தேவஸ்தான செயல் அலுவலர், திருப்பதி நகர்புற வளர்ச்சி கழக தலைவர் ஆகிய அனைவரும் அறங்காவலர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

MLA-Kumaraguru

MLA-Kumaraguru

ஒட்டுமொத்தமாக 28 பேர் அடங்கிய இந்த குழுவில், ஆந்திராவில் 8 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும், தமிழ்நாட்டில் 4 பேரும், கர்நாடகாவில் இருந்து 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு மற்றும் வைத்தியநாதன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top