அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க ஆதரவு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக அவரை நியமிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை பகிரங்கமாகவே அறிவித்தார் பன்னீர்செல்வம். சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் மௌனமாக தியானம் செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொதுச் செயலாளராக மதுசூதனனை நியமிக்கலாம் என்று கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று திடீரென வருகை தந்தார். பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தற்போது உள்ள தமிழக அரசியல் சூழலில் அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் பன்னீர் செல்வத்தைச் சந்தித்துப்பேசி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.