புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மாவீரம் போற்றுதும், மாவீரம் போற்றுதும்.. TVK தலைவரின் வைரல் பதிவு, என்ன அர்த்தம்?

இலங்கைப் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக விடுதலைப் புலிகள் அமைப்பினர் மாவீரர் நாள் என்ற நிகழ்வை முன்னெடுத்தனர். அதன்படி, இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தமிழீழப் போர் 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்டத்தை அடைந்தது.

இதில் சிங்க ராணுவத்தினரால் பிரபாகரன் உள்ளிட்ட பல விடுதலை புலிகள் வீரமரணமடைந்தனர். எனவே ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போரில் மரணமடைந்தவர்களுகாக மாவீரர் நாள் தமிழ் ஆர்வலர்களாளும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களினாலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்

இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சிய தொடங்கிய விஜய் இன்று தன் எக்ஸ் தள பக்கத்தில் மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும் என்று இரண்டே வரிகளில் இலங்கை போரில் வீர மரணமடைந்தோருக்கான நிகழ்வை இன்று நினைவு கூறும் வகையில் இதைப் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே போர் நடந்துகொண்டிருந்தபோது விஜய் மேடையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தன் கருத்தைப் பகிர்ந்திருந்தார். அதன்பின், அக்டோபர் 27 ஆம் தேதி, தவெகவின் முதல் மாநாட்டில், தமிழ் தேசியமும், இந்திய தேசியமும் இரண்டு கண்கள் என்று, அது தன் கொள்களில் ஒன்று என்று குறிப்பிடிருந்தார். இது அரசியல்வாதிகள் மத்தியில் கவனம் பெற்று, விஜயின் பேச்சு விவாதப் பொருளானது.

இதையடுத்து, விஜய்யின் தவெக சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில், 26 கொள்கைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 10 வது பாயிண்டாக, “ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்மானம் இடம்பெற்றிருந்தது. அதில், இலங்கைக்கான இந்திய தூதராக தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

பொதுவாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்வதாக” அத்தீர்மானத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் இந்த ‘மாவீரம் போற்றுதும் மாவீரம் போற்றுதும்’ என்ற பதிவு இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

vijay x post
vijay x post
- Advertisement -

Trending News