hraja
hraja

அஜித்திற்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

hraja
hraja

தமிழகத்தில் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வென்றதை தொடர்ந்து, லெனின் சிலை அகற்றப்பட்டது. அப்போது, தமிழகத்திலும் பெரியார் சிலை விரைவில் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டு இருந்தார். இது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். அடுத்த நாளே, அப்பதிவை நான் போடவில்லை. என் அட்மின் தான் பதிவு செய்து இருக்கிறார். இருந்தும் தவறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து, அட்மின் பஞ்சாயத்துக்கள் தமிழகத்தில் அதிகரித்து இருப்பது என்றே சொல்ல வேண்டும்.

மே தினமான இன்று அஜித்தின் பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித்திற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். எதிர்பாராத விதமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டரில் இருந்து அவரது பிறந்தநாளுக்கு ஒரு பதிவு போடப்பட்டது. அப்பதிவில், ஹாப்பி பர்த்டே அஜித்குமார். வெற்றிகளை பெற என் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், டுவீட் போடப்பட்ட சில நிமிடங்களில் நீக்கப்பட்டது.

தொடர்ந்து, செங்கோட்டையன் நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விட்டனர் என விளக்கம் அளித்தார். யாருப்பா அட்மினு சூதானமா வேலை பாருங்கப்பா..

அது சரி, வாழ்த்து தானே இதில் என்ன இருக்கு என பலரும் கிசுகிசுக்க தொடங்கியது. இதுகுறித்து, அதிமுக தரப்பில் அஜித்தை வாழ்த்தக் கூடாது என்றில்லை. ஆனால் இதை வைத்து அவரை அதிமுகவுக்கு இழுக்க முயற்சிப்பது போல பிம்பம் உருவாகி விடும். இருதரப்புக்குமே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் அமைச்சர் மறுப்புச் செய்தி வெளியிட்டார் எனத் தெரிவித்து இருக்கிறார்கள்.
அதற்கு காரணம், பல நாட்களாக தள்ளிப்போன விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் தொடங்க இருக்கிறது. அதற்காக, ஐதராபாத் பிலிம் சிட்டியில் பல கோடி ரூபாயிற்கு செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், கலந்து கொள்ள அஜித் தற்போது ஐதராபாத்தில் இருக்கிறார். தன் புகழை விட பணியையே முக்கியமாக கருதுபவர். இதனால் தான் இன்றும் தமிழ் சினிமாவின் தல என்ற அந்தஸ்தை தக்க வைத்து இருக்கிறார்.

cinema

விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்து இருக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தயாரிப்பாளர் சங்க போராட்டத்தால் லேட்டாக தொடங்கி இருக்கும் படப்பிடிப்பால் ரிலீஸும் தள்ளி போக இருக்கிறது. இதனால், அடுத்த புத்தாண்டு தல புத்தாண்டாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.