Tamil Cinema News | சினிமா செய்திகள்
புல்லட்டில் சந்தோஷமாய் சேட்டை செய்யும் துருவ் விக்ரம். “ஆதித்யா வர்மா” படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?
விக்ரமின் ஜூனியர் துருவ் நடிக்கும் முதல் படம் (ஆதித்யா) வர்மா.
தன் முதல் படத்தின் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்துவிட்டார் துருவ். விஜய் தேவர்கொண்டாவின் அர்ஜுன் ரெட்டி ரிமேக். படத்தின் பைனல் காப்பி பிடிக்காததால் புதிய டெக்கினிக்கல் டீமுடன் பட்டி- டிங்கரிங் பார்க்கிறார் தயாரிப்பாளர்.
ஒரிஜினல் வெர்ஷன் இயக்கிய சந்தீப் வாங்க ரெட்டியின் உதவியாளர் கிரிசய்யா இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியானார் பனிதா சந்து. மேலும் பிரியா ஆனந்த் மற்றும் புதுமுகங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைக்கிறார்.
@E4Emovies @dop007 @sooriaruna @DhruvVikramOffl @BanitaSandhu @Viveka_Lyrics @sureshsrajan Adithya Varma shoot completed See Dhruv rejoice pic.twitter.com/i1CDTmexZZ
— MUKESH RATILAL MEHTA (@e4echennai) May 14, 2019
ஆதித்யா வர்மா’ படத்தின் படப்பிபடிப்பு முடிந்துவிட்டதாக பட தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
