சொந்த வாழ்க்கையை ஓரங்கட்டிய அதிதி ஷங்கர்.. ரொமான்டிக் இயக்குனருடன் உருவாக்கும் புதிய படம்

பிரம்மாண்ட படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஷங்கர் குடும்பம் சந்தோஷத்தை இழந்து பரிதவித்து வருகிறது.

அவருடைய இளைய மகளான அதிதி ஷங்கர் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். அதிதி இப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படமும் கிராமத்து கதையம்சம் கொண்ட படமாகும். இப்படத்தின் போஸ்டரில் அதிதி பாவாடை, தாவணியுடன் உள்ள புகைப்படம் பலராலும் கவரப்பட்டது. அச்சு அசலாக கிராமத்து பெண்ணாகவே மாறி இருந்தார் அதிதி ஷங்கர். விருமன் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி விருமன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது அதிதியின் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் விருமன் படத்தை தொடர்ந்து அதிதி ஷங்கர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள கொரோனா குமார் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான கப்பேலா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அதிதி நடிக்கயுள்ளார்.

இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார். இதனால் கண்டிப்பாக இப்படம் காதல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிதி தன் குடும்பத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்து தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

Next Story

- Advertisement -