இயக்குனர் மணிரத்னத்தினால் நடிகை அதிதிராவ் சென்னையில் நிரந்தரமாக செட்டிலாக வீடு பார்த்து வருகிறார்.

நடிகர் கார்த்தி, அதிதிராவை வைத்து இயக்குனர் மணிரத்னம் ‘காற்று வெளியிடை’ படத்தை இயக்கினார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வி சந்தித்தது. இருப்பினும் மணிரத்னம் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை ரெடி பண்ணிவிட்டார். இந்தப் படத்தில் இரண்டு பெரிய ஸ்டார்கள் நடிக்கவுள்ளனராம்.

அதிகம் படித்தவை:  வரம்புமீறும் பிக்பாஸ்.! லிப்லாக் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.!

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக மீண்டும் அதிதிராவை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவரிடம் சுமார் ஒரு வருடம் சென்னையில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக நடிகை அதிதிராவ் சென்னையில் வீடு பார்த்து வருவதாகவும் தெரிகிறது. தற்போது சஞ்சய் லீலாவின் ‘பத்மாவதி’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அதிதி மிக விரைவில் சென்னையில் செட்டில் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.