ஒரே சினிமாவில் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த அதிதி பாலன், இதுவரை நிராகரித்த கதைகளின் எண்ணிக்கையால் கோலிவுட்டே வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி படம் அருவி. இப்படத்தில் நாயகியாக அதிதி பாலன் நடித்தார். படத்திலும் பெரும்பாலனவர்கள் புதுமுகம் என்பதால் இப்படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டது. வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் அதிதி பாலன். சரி, பர்ஸ்ட் லுக் ஹிட் அடித்து எதிர்பார்ப்பு அதிகரித்தால் படம் சொதப்புமே. ஆனால், அதெல்லாம் இல்லை. கதையை மட்டுமே நம்பினால் கண்டிப்பாக மாஸ் ஹிட் நிச்சயம் என்பதை படக்குழு நிரூபித்தது. சாதரண முகம், அலட்டல் இல்லாத நடிப்பு என அனைவரையும் படத்தில் கவர்ந்தவர் அதிதி பாலன். அவரின் கிளைமேக்ஸ் காட்சிகளை பார்த்து இதுவரை அழுகாமல் இருப்பவர்கள் கிடையவே கிடையாது.

ஒற்றை ஆளாக படத்தை சுமந்த அதிதிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் அருண் பிரபு, நடிகை அதிதி பாலன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அழைத்து நேரில் பாராட்டி, தங்க செயினை பரிசாக அளித்தார். பொது இடங்களில் கூட அதிதி புடவை கட்டி அமைதியாகவே வலம் வருகிறார். தேசிய விருது போட்டியில் முன்னவே போட்டியிட்டு விட்டதால் அந்த வாய்ப்பு மட்டும் படத்திற்கு மிஸ்ஸாகி இருந்தது. ஆனால், கோலிவுட்டின் வெற்றி பட வரிசையை லாவகமாக தக்க வைத்து விட்டது.

Aditi Balan

இந்நிலையில், நடிகை அதிதி பாலன் அப்படத்திற்கு பிறகு இதுவரை எந்த படத்திலும் நடிப்பதாக அறிவிக்கவில்லை. இதுகுறித்து, விசாரித்த போது இதுவரை 150 கதைகளை நிராகரித்து இருக்கிறாராம். தனக்கு அருவி மூலம் கிடைத்த பெயரை கெடுத்து கொள்ள அதிதி விரும்பவில்லையாம். தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதத்துடன் இருக்கிறாராம். அதிதியின் நண்பர்கள் வரும் படத்தை ஒப்புக்கொள் இல்லை என்றால் உன்னை மறந்து விடுவார்கள் என அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் அதிதி 10 வருடம் ஆனாலும் சரி ஊறுகாய் கதைகளில் எல்லாம் தன்னால் நடிக்கவே முடியாது என அழுத்தமாக இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கிறது.