Videos | வீடியோக்கள்
முரட்டுத்தனமான காதலின் முட்டாள்தனமான முடிவுகள்.. ஆதித்ய வர்மா புதிய ட்ரெய்லர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தில் துருவ் விக்ரம் மற்றும் பனிதா சந்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நடிகை பிரியா ஆனந்த் இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தோன்ற இருக்கிறார். இந்த படத்தை E4 என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை கிரீசாய என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார்.
இதற்கு முன் டைரக்டர் பாலா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஆனால் விக்ரம் உடன் ஏற்பட்ட சின்ன மனக்கசப்பு காரணமாக படத்தில் இருந்து திடீரென விலகி விட்டார்.
இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் வெளியாகி பட்டையைக் கிளப்புகிறது.
