Videos | வீடியோக்கள்
பெரும் ஏமாற்றத்தை கொடுத்த ஆதிபுருஷ் டீசர்.. இதுக்கு விஜய் டிவி ராமாயணமே பரவால்ல

சமீபகாலமாக வரலாறு மற்றும் அனிமேஷன் பாணியில் பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதிலும் தெலுங்கு இயக்குனர்களுக்கு இது போன்ற கதைகளின் மேல் ஏன் இவ்வளவு ஆர்வம் என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இது போன்று பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி கொண்டிருக்கின்றனர்.
தற்போது ஓம் ராட் இயக்கத்தில் பிரபாஸ், சைப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஆதிபுருஷ். புராண காவியமான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை டி சீரிஸ் பிலிம்ஸ் மற்றும் ரெட்ரோபைல்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
Also read : பாகுபலி சாதனையை முந்துகிறது பிரபாஸின் ஆதிபுருஷ்.. இது எங்க ஊரு அவதார் என கொண்டாடும் ரசிகர்கள்
அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் ரஜினியின் நடிப்பில் கோச்சடையான் என்ற அனிமேஷன் திரைப்படம் வெளிவந்தது.
அதை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும் இந்த டீசரில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் எதுவும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. சொல்லப்போனால் சுட்டி டிவியில் வரும் கார்ட்டூன் போன்று இருக்கிறது. பிரபாஸ் ராமனாகவும், சைப் அலிகான் ராவணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
Also read : கேஜிஎப் இயக்குனரை மலைபோல் நம்பி இருக்கும் பிரபாஸ்.. விட்டதை பிடிக்க போட்ட பக்கா பிளான்!
டீசரின் ஆரம்பமே பிரபாஸின் கம்பீர குரலோடு ஆரம்பிக்கிறது. ஆனால் அதைக் கேட்கும்போது பாகுபலியில் அவர் பேசும் வசனம் தான் ஞாபகம் வருகிறது. இன்னும் அதன் தாக்கத்திலிருந்து அவர் வெளிவரவில்லையா என்று ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
ஆக மொத்தத்தில் இந்த படத்திற்கு பதில் விஜய் டிவியின் ராமாயணம் எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் தான் பலருக்கும் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் இந்த ஆதிபுருஷ் ரிலீசானால் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆதிபுருஷ் டீசர்
Also read : இருக்க கொஞ்சநஞ்ச பெயரையும் கெடுத்து விடாதீர்கள்.. பயத்தில் கட்டளை போட்ட பாகுபலி பிரபாஸ்
