Marumagal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மருமகள் சீரியலில், தனிக்குடித்தனம் போனால் மட்டும்தான் நிம்மதியாகவும் சம்பாதிக்கிற பணத்தை சேமிக்கவும் முடியும் என நினைத்து பிரபு கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதே மாதிரி ஆதிரை, சித்திக் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல குடும்பத்தில் மருமகளாக வாக்கப்பட்டு போக வேண்டும் என்று ஆதிரையின் அப்பா முடிவு எடுத்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரபுவின் அப்பாவும், ஆதிரையின் அப்பாவும் நெருங்கிய தோழர்கள் என்பது தெரிய வந்த நிலையில் சம்பந்தி ஆகலாம் என்று முடிவெடுத்தார்கள். இதற்கு இடையில் ஆதிரை மற்றும் பிரபுவும் டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட்டு ஒருத்தரை ஒருத்தர் விரோதி மாறி பார்த்து வந்தார்கள். அந்த வகையில் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வீட்டில் பார்க்கும் கல்யாணத்துக்கு சம்மதம் கொடுத்தார்கள்.
கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த ஆதிரை மற்றும் பிரபு
பிறகு ஆதிரையை தான் பொண்ணு பார்க்க போகிறோம் என்று தெரியாத பிரபுவுக்கும், நம்மளை கல்யாணம் பண்ண போகிற மாப்பிள்ளை பிரபு தான் என்று தெரியாத ஆதிரைரையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் பொழுது அதிர்ச்சியாகி விட்டார்கள். ஆனாலும் குடும்பத்திற்காக வாக்கப்பட்டு கஷ்டப்படுவதை விட உண்மையை சொல்லலாம் என்று முடிவெடுத்தார்கள்.
இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு எந்தவித சண்டையும் இல்லாததால் பேசிப் பார்க்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். அந்த வகையில் தன்னுடைய குடும்பத்தையும் ஒன்றாக பார்த்து நேசிக்கும் பிரபுதான் நமக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று ஆதரவு முடிவு எடுத்து விட்டார். அதே மாதிரி பிரபுவும், எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்வதற்கு ஏற்ப எப்பொழுது வேல்விழியை ஆதிரை கைநீட்டி கன்னத்தில் அடித்தால் என்று தெரிந்ததோ அப்பொழுதே ஆதிரை தான் என்னுடைய மனைவி என்று பிரபுவும் முடிவு எடுத்து விட்டார்.
இந்த சூழலில் இருவரும் மனம் விட்டு பேசி ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு கல்யாண பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். இனி இவர்களுடைய கல்யாணத்தை நிறுத்துவதற்கு வேல்விழி ஒவ்வொரு பிளானட் போட்டு தடுத்து நிறுத்த ஏற்பாடு பண்ணுவார். ஆனால் அதையெல்லாம் முறியடித்து இவர்கள் கல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் சரி செய்து மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவார்கள்.
அதே நேரத்தில் அவ்வப்போது இவர்களுடைய கேரக்டர்கள் வேறுபட்டு இருப்பதால் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை நடந்து அதன் மூலமும் ரொமான்ஸ் காட்டி வருவார்கள். இதனை தொடர்ந்து பிரபு குடும்பத்திற்கு ஒரு நல்ல மருமகளாக ஆதிரை நுழைந்து பிரபு செய்யாமல் தவறவிட்ட கடமைகள் அனைத்தையும் ஆதிரை முன்ன நின்னு எல்லாத்தையும் சரிவர செய்து காட்டுவார்.
- எதிர்நீச்சல் போல் சன் டிவி சீரியலை ஆக்கிரமித்த 2 சீரியல்கள்
- முக்கியமான சீரியலின் நேரத்தை மாற்றும் சன் டிவி
- Sun Tv Serial: 1000 எபிசோடு தாண்டி முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்